Showing posts with label உருவப்படம். Show all posts

எங்கள் ஊர் வயல்வெளியில் எடுக்கப்பட்ட படம் இது. இந்தக்குழந்தை என் அக்கா மகள். கொல்லைக்குப் போகிறோம் என்றதும் தலைகூட பின்னிக்கொள்ளாமல் வந்துவிட்டாள். ஆனால் அதுதான் இந்தப் படத்திற்கு ஒரு இயல்பான தோற்றத்தைக் கொடுக்கிறது!
படத்தின் பின்புலமாக இருப்பது கரும்புத்தோட்டம். view finder -ல் பார்க்கும்போதே, பின்புலம் முழுதும் பச்சையாக இருப்பதைக்காட்டிலும் குழந்தையின் தலைக்குப் பின் அந்தத் தென்னைமரம் இருப்பது இன்னும் நன்றாய் இருப்பதாய்ப் பட்டது.
'உன் இஷ்டத்திற்கு சிரித்துக்கொண்டிரு' என்று சொல்லிவிட்டு எடுத்த பலவற்றில் தேறியவை இவைதான்! இரண்டு படங்களிலுமே framing sense எனக்கு திருப்தியாய் இருந்ததால் 'crop' பண்ணாமல் அப்படியே கொடுத்திருக்கிறேன். மற்றபடி நீங்கள்தான் சொல்லவேண்டும்.
இப்படத்தை Canon PowerShot S3 IS காமிராவில் எடுத்தேன். சமீபத்தில் வாங்கியது என்பதால் இன்னும் அதன் பயன்பாடுகள் முழுதும் கைவரவில்லை. எனவே ரிஸ்க் எடுக்காமல் 'auto mode' -ல் எடுக்கப்பட்ட படங்கள் இவை!
குழந்தையின் சிரிப்பில்...
உருவப்படம்