குழந்தையின் சிரிப்பில்...எங்கள் ஊர் வயல்வெளியில் எடுக்கப்பட்ட படம் இது. இந்தக்குழந்தை என் அக்கா மகள். கொல்லைக்குப் போகிறோம் என்றதும் தலைகூட பின்னிக்கொள்ளாமல் வந்துவிட்டாள். ஆனால் அதுதான் இந்தப் படத்திற்கு ஒரு இயல்பான தோற்றத்தைக் கொடுக்கிறது!

படத்தின் பின்புலமாக இருப்பது கரும்புத்தோட்டம். view finder -ல் பார்க்கும்போதே, பின்புலம் முழுதும் பச்சையாக இருப்பதைக்காட்டிலும் குழந்தையின் தலைக்குப் பின் அந்தத் தென்னைமரம் இருப்பது இன்னும் நன்றாய் இருப்பதாய்ப் பட்டது.

'உன் இஷ்டத்திற்கு சிரித்துக்கொண்டிரு' என்று சொல்லிவிட்டு எடுத்த பலவற்றில் தேறியவை இவைதான்! இரண்டு படங்களிலுமே framing sense எனக்கு திருப்தியாய் இருந்ததால் 'crop' பண்ணாமல் அப்படியே கொடுத்திருக்கிறேன். மற்றபடி நீங்கள்தான் சொல்லவேண்டும்.

இப்படத்தை Canon PowerShot S3 IS காமிராவில் எடுத்தேன். சமீபத்தில் வாங்கியது என்பதால் இன்னும் அதன் பயன்பாடுகள் முழுதும் கைவரவில்லை. எனவே ரிஸ்க் எடுக்காமல் 'auto mode' -ல் எடுக்கப்பட்ட படங்கள் இவை!

13 Response to குழந்தையின் சிரிப்பில்...

August 1, 2007 at 11:58 AM

Very nice picture வாழ்த்துக்கள்.

August 1, 2007 at 12:05 PM

thanks pavan :)

August 1, 2007 at 12:29 PM

Arumaiyaa vanthirukku Arulkumar.

August 1, 2007 at 5:36 PM

2 சிரிப்புமே அழகு!

August 1, 2007 at 6:30 PM

ஆதி, ஜெஸிலா இருவருக்கும் என் நன்றிகள்!

August 1, 2007 at 6:45 PM

கலக்கல்

August 2, 2007 at 6:23 AM

beautiful.very long tele lens? background out of focus directs view to the subject. good.
sahadevan

August 2, 2007 at 10:03 AM

நன்றி பாலா. நன்றி சகாதேவன்.

August 3, 2007 at 1:51 PM

நல்லா கம்போஸ் செய்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.

August 6, 2007 at 12:37 AM

இரண்டு படங்களும் நன்றாக வந்திருக்கிறது.

August 6, 2007 at 10:22 AM

ஒப்பாரி, ஆதிபகவன் இருவருக்கும் நன்றி!

August 7, 2007 at 10:11 AM

பட்டறையில் நீங்க கேமராவ வச்சு கலக்கிட்டு இருந்தப்பவே நினைச்சேன், உங்களுக்குள்ள ஒரு பி.சி.ஸ்ரீராம் ஒளிஞ்சிகிட்டு இருக்கப்பாருன்னு . படங்கள் அருமை அருள்.

August 8, 2008 at 10:16 AM

இளந்தென்றலில்
கூந்தல் ஆடிஅசைவதற்காகவா..?
பின்னலை மறந்தாய்

உன் புன்னகைதானடி முத்துகள்
சிதறி விழுவதுபோல்
சத்தம் என் காதினில்
விழுகின்றது
உன் பிஞ்சுப்பாதம்
வயலில் பட்டதும்
கருப்புகள் கூட..
துள்ளுக்குதிக்கின்றன
உயர்வான தென்னை
மரம் கூட
நிமிர்ந்து நிக்கின்றது
உன் புன்னகையை
இளநீராக அருந்திவிட.


உனது புன்னகையும் குறும்பும்
என்றும் தொடரட்டும்
வாழ்க நீ..செல்லமகளாய்

அன்புடன்
ராகினி
ஜெர்மனி


Supported by Doteasy.com -The Free Web Hosting Provider
Wordpress Theme by Graph Paper Press

Copyright 2010 by Work-a-holic Blogger Template.
Blogger Template by Blogspot Templates